வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 2 மே 2015 (17:14 IST)

அய்யர்மலையில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி

அருள்மிகு அய்யர்மலை இரத்தினகிரீசுவரா் திருக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
 

 
கரூர் மாவட்டம்,  குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீசுவரா் திருக்கோவிலில், தங்கள் குல தெய்வம் இன்னது என்பது தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரரை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
 
சுவாமிக்கு பால் அபிசேகம் செய்த பச்சை பால், மாலை நேரம் வரை கெடாது. பத்தி மற்றும் கற்பூரம் ஆகியவை பாலில் விழுந்த போதிலும் அது கெடுவதில்லையாம். மேலும், முதல் நாள் அபிசேகம் செய்த பால் அடுத்த நாள் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறி விடுவது. இக்கோயிலில் இன்று வரை நடக்கும் அதிசயமான ஒன்றாகும். மேலும், இந்த மலை மீது காகம் கூட பறக்காது என்பதால், இதை காகம் பறவா மலை என்றும் அழைக்கப்படுகின்றது.
 
மேலும், இங்குள்ள இறைவனை வழிபட்டால் கல்யாண வரம் மற்றும் தொழில் விருத்தி மற்றும் புத்திர பாக்கியம் ஆகியவை நிறைவேறுகின்றன என்பது பொது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
 

 
இந்த நிலையில், அய்யர்மலை அருள்மிகு இரத்தினகிரீசுவரா் திருக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சி மே 1 ஆம் தேதி வெகு விமர்ச்சையாக  நடைபெற்றது.
 
இந்த விழாவில், குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ பாப்பாசுந்தரம், முன்னாள் திமுக எம்.எல்.ஏ மாணிக்கம், கோட்டாட்சியர் சக்திவேல், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் வைரபெருமாள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள்,  அய்யர்மலை குடிபாட்டைச் சார்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.