மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகை

Webdunia|
FILE
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி இன்று மற்றும் நாளை சென்னைக்கு வருகை புரிகிறார்.

சென்னை விரும்கம்பாக்கத்தில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தில் ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரம்மஸ்தான ஆலயத்தின் 23-ஆம் ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

மாதா அமிர்தானந்தமயி சென்னையில் தங்கியிருக்கும் 2 நாள்களும் பஜனை, தியானம், சிறப்பு பூஜைகள் என பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்த ஆன்மிக நிகழ்ச்சிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :