வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்!

webdunia photoFILE
வயலின் என்றால் வைத்தியநாதன் என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன், கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றிய நிலையில் போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவருக்கு நேற்று இரவு கடும் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து இரவு 8.45 மணிக்கு அவர் மரணமடைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை மந்தவெளி, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இசைக் கலைஞர்களும், திரையுலகத்தினரும் அவரது உடலிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

12 வயதில் மேடையேறினார்!

1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் இராமசாமி சாஸ்த்திரி - மீனாட்சி ஆகியோருக்கு வைத்தியநாதன் பிறந்தார். கர்நாடக இசைக் கலைஞரான தனது தந்தை இராமசாமி சாஸ்த்திரியிடம் இளம் வயதிலேயே கற்கத் தொடங்கிய வைத்தியநாதன், வாய்ப்பாட்டுடன் வயலின் இசைக்கவும் கற்றுத் தேர்ந்தார்.

12 வயதிலேயே இசைக் கச்சேரிகளில் பங்கேற்று சாதனை புரிந்த வைத்தியநாதன், கர்நாடக இசையில் சிறந்து விளங்கிய வித்தகர்களான அரியாக்குடி இராமானுஜ ஐயங்கர், செம்மங்குடி சீனிவாச ஐயர், மஹாராஜபுரம் சந்தானம், சித்தூர் சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து பல கச்சேரிகளில் பங்கேற்றார்.

கர்நாடக இசைக் கலைஞர்கள் மட்டுமின்றி, நாகஸ்வர மேதைகள் திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை, திருவென்காடு சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

Webdunia|
கர்நாடக இசையிலும், திரை இசைப் பாடல்களிலும் இசை ரசிகர்களை மட்டுமின்றி பாமர மக்களையும் தனது வயலின் இசையால் மயக்கிய வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் காலமானார்.
தனித்தும் இசைக் கச்சேரிகளை நடத்திய வைத்தியநாதன், கர்நாடக இசையை பாமர மக்களும் ரசிக்கும் வண்ணம், அவர்கள் மிகவும் ரசிக்கும் சிறந்த திரையிசைப் பாடல்களையும் இடையிடையே வாசித்து மகிழ்வித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :