வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2015 (10:30 IST)

புலிகள் பெயரை நீக்கி தமிழக அரசு புதிய மனு தாக்கல்

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளல் ஆபத்து என்று தாக்கல் செய்த மனுவை திருத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சமீப மனுவுக்கு பதிலாக புதிய மனு ஒன்று உடனடியாக தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 
புலனாய்வு பிரிவின் ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடுதலைப் புலிகள் தொடர்பான குறிப்பை, தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற விளக்கத்தை கொண்ட மனுவை தாக்கல் செய்யும்படி தனக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் திங்களன்று தெரிவித்துள்ளார்.
 
திமுகவின் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், இந்த விவகாரத்தில் தங்களது கற்பனைகளை கலந்து தவறான பிரச்சராங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், விடுதலை புலிகளை இழிவுப்படுத்தும் எத்தகைய கருத்தையும் தமிழக அரசு குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளிக்கவும் செய்தார்.
 
மேலும் அந்த மனுவில் புலனாய்வு பிரிவின் ஆய்வு அறிக்கை இணைக்கப்பட்டிருந்தது என்றும், அந்த அறிக்கையின் ஒரு பகுதியில் தான் விடுதலை புலிகள் தொடர்பிலான குறிப்புகள் இடம்பெற்றிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
தற்போது தாக்கல் செய்யவிருக்கும் புதிய மனுவில், அது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு தெளிப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.