வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 26 மார்ச் 2014 (12:55 IST)

என்னை நீக்க தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - அழகிரி

என் மீது நடவடிக்கை எடுக்க யார் தூண்டுதலாக இருந்தார்களோ அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க மாட்டேன். 2 மாதத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். பொறுத்து இருந்து பாருங்கள் என்று மு.க.கூறியுள்ளார்.
தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி நேற்று கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து வழக்கு தொடர போவதாகவும், திமுகவில் நீடிப்பேன் என்றும் அழகிரி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் செய்து ஆதரவு திரட்டுவதற்காக அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
 
ஆரணியில் முன்னாள் எம்.பி.ஏழுமலை அவரது மகன் முருகன் மற்றும் சில திமுக பிரமுகர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக மதுரையில் இருந்து விமானம் மூலம் அழகிரி சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
 
கேள்வி:– நீங்கள் அறிவாலயம் செல்கிறீர்களா?
 
பதில்:– நான் ஆரணி செல்கிறேன்.
 
கே:– இதுவரை இல்லாத அளவிற்கு கூட்டம் கூடி இருக்கிறதே?
 
ப:– என்னுடைய பெருமையைப் பற்றி நானே சொல்லக் கூடாது.

கே:– உங்களை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி இருக்கிறார்கள். உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
 
ப:– என் மீது நடவடிக்கை எடுக்க யார் தூண்டுதலாக இருந்தார்களோ அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க மாட்டேன். 2 மாதத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். பொறுத்து இருந்து பாருங்கள்.
 
கே:– உங்கள் நண்பர் எஸ்.ஆர்.கோபி திடீரென விலகி ஸ்டாலினுடன் இணைந்து இருக்கிறாரே?
 
ப:– நண்பர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
 
கே:– உங்களை ஓரம் கட்டி விட்டு மு.க.ஸ்டாலினை தலைவராக்க முயற்சி நடக்கிறதா?
 
ப:– அவர் தலைவர் ஆனா என்ன? ஆகாட்டா என்ன? நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். சொத்தை பாதுகாப்பதற்கு தலைவர் ஆகிறார்.
 
மு.க.அழகிரியை வரவேற்க விமான நிலையத்தில் 500–க்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருந்தனர். பம்மல் நல்லதம்பியின் மகன் இன்பராஜ், பொழிச்சலூர் ஊராட்சி தலைவர் ஞானமணி உள்ளிட்ட தெண்டர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
 
முன்னதாக டெல்லியில் இருந்து சென்னை வந்த காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் விமான நிலையத்தில் மு.க.அழகிரியை சந்தித்து பேசினார்.
 
இருவரும் பரஸ்வர நட்பை பரிமாறிக் கொண்டனர். அப்போது காங்கிரசுக்கு ஆதரவு தருமாறு வசந்தகுமார் அவரிடம் கேட்டார். பின்னர் வந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
 
மு.க.அழகிரி என் நீண்ட கால நண்பர். 30 வருடம் பழக்கம். மதுரை கிளையை அவர்தான் தொடங்கி வைத்தார்.
 
அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது தொழிலுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
 
நட்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவரிடம் ஆதரவு கேட்டேன் என்று அவர் கூறினார்.