சாதிய ஆணவக் கொலை குறித்து யுவராஜின் பரபரப்பு கடிதம்: வாட்ஸ் அப்பில் உலா


Ashok| Last Modified சனி, 19 மார்ச் 2016 (13:28 IST)
தனிப்பட்ட விரோதங்களால் நடக்கும் கொலைகளை சாதிய ஆணவக் கொலை என்று முத்திரை கட்டக் கூடாது என கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ் குறிப்பிடுவதாக வாட்ஸ் அப்பில் கடிதம் ஒன்று உலாவருகிறது. 

 


கோகுல்ராஜ் கொலை வழக்கு, டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா தற்கொலை வழக்கு ஆகியவற்றில் கைதாகி தற்போது வேலூர் சிறையில் உள்ள யுவராஜ், அவர் எழுதியதாக கடிதம் ஒன்று வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
 
அந்த கடிதத்தில், காதலர்கள் கொலை செய்யப்பட்டலோ அல்லது சந்தேக மரணமோ நிகழ்ந்து விட்டால் அதனை போலீசார் விசாரித்து முடிவுக்கு வருவதற்குள் அதற்கு சாதிய ஆணவக் கொலை என முத்திரை குத்தி போராடுவது தவறு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், போராட்டங்களால் ஏற்படும் பதற்றங்களை தணிக்க கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக அரசு நிதி உதவி அளிப்பது தவறு, அவ்வாறு அளிக்கப்படும் நிதி உதவிகளில் 80 சதவீதத்தை சாதிய ஆணவக் கொலை என்று கூறி போராட்ட்தில் ஈடுபடும் சில குழுக்கள் வாங்கிச் சென்றுவிடுகிறது..

இது போன்ற கும்பல்களை வளர்த்துவிடும் செயல்களை அரசு செய்யக் கூடாது என்றும் பெண்ணை கவர்ந்து செல்பவன் பெண் வீட்டாரை நடைப் பிணமாக்குகிறான், இதனால் பெண்ணை இழந்தவன் ஆக்ரோஷத்தில் மேற்கொள்ளும் இது போன்ற கொலைகள் மீது அரசியல் காரணங்களுக்காக சாதி முத்திரை குத்தப்படுவதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  
அனைத்து சாதி பெண்களையும் திட்டமிட்டுக் கவர்ந்து அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதன் மூலம் சமத்துவத்தை நிலைநாட்டுங்கள் என அறைகூவல் விடுக்கும் தலைவர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் திருத்துவதன் மூலமுமே இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் யுவராஜ் எழுதியதுதானா என்று அவர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த கடிதம் வெளியானது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :