மொபைல் எடுக்கப்போய் உயிரை விட்ட வாலிபர்!.. அப்பாவை இழந்த 9 மாத குழந்தை...
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(31). இவருக்கு திருமணமாகி 9 மாத ஆண் குழந்தை இருக்கிறது. அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாபநாசம் தலையணையில் குளிப்பதற்காக அவர் சென்றுள்ளார்.
அப்போது அவரின் செல்போன் தவறி தண்னீரில் விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக அவர் தண்ணீரில் இறங்கியபோது அவர் தண்ணீரில் மூழ்கியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமசிங்கபுரம் காவல் அதிகாரிகள் அவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஆறுமுகத்தின் உடலை பார்த்து அவரின் மனைவியும், குடும்பத்தினரும் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.