காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் இளம்பெண் தற்கொலை? - சமைக்க தெரியாததல் அவமானம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 16 ஜூன் 2016 (10:39 IST)
சமைக்க தெரியாததல் அவமானத்தால், இளம்பெண் ஒருவர் காதல் திருமணம் செய்த ஒரே ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
திருவள்ளூர் அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (27) தனியார் ஊழியர். இவரது மனைவி சுபா (25). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுபா வீட்டில் சமையல் சரியாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
 
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து சந்தோஷ் குமார் சுபாவின் தந்தை முத்து கிருஷ்ணனுக்கு போன் செய்து சுபா சரியாக சமைக்கவில்லை என்று கூறினார். இதனால் சுபா மனவேதனை அடைந்தார்.
 
இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு சந்தோஷ் குமாருக்கும், சுபாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே சுபா வீட்டின் படுக்கை அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டார்.சந்தோஷ் குமார் அடுத்த அறையில் படுத்து தூங்கியுள்ளார்.
 
அடுத்த நாள் 14ஆம் தேதி காலையில் சுபா அறையின் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சந்தோஷ்குமார் கதவை தட்டினார். திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சுபா துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது என்கிறார்கள்.
 
தகவல் அறிந்ததும் வெள்ளவேடு காவல் துறையினர் விரைந்து சென்று சுபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :