1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (21:30 IST)

பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. மாணவர்கள் உற்சாகம்

கரூர் அடுத்த காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக  ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
 

கரூரை அடுத்த காந்திகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செ.ஜெரால்டு தலைமையேற்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓசோன் படலம் பற்றிய தகவல்களையும், நாம் வாழுகின்ற இந்த புவிக்கோளத்தை எவ்வாறு ஓசோன் படலம் பாதுகாத்து வருகிறது, ஓசோன் படலத்தில் எத்தனை அடுக்குகள் அபற்றியும் எடுத்துக் கூறினார்.மேலும், ஓசோன் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணத்தையும் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் முடிவில் யாழினி என்ற பள்ளி மாணவியின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த மாணவிக்கு பிறந்தநாள் பரிசாக செ.ஜெரால்டு அவர்கள் மரக்கன்று வழங்கினார்.