ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்..! இனிமே எந்த பயமும் இல்லாமல் நாங்க தைரியமா வீதில நடப்போம். சிங்கப்பெண்ணிடம் நன்றி சொன்ன பெண்
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. இந்த அதிரடிப்படை தற்பொழுது மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தங்களது அதிரடி பணியை தொடங்கியுள்ளது.
சென்னை பேசின் பாலம், வால் டாக்ஸ் சாலை உட்பட மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள் மற்றும் வணிக வளாகப் பகுதிகளில் இந்த சிறப்பு படை பெண் காவலர்கள் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர ரோந்து மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களுக்கு தொல்லை தரும் சமூக விரோதிகள் மற்றும் போக்கிரிகளுக்கு எதிராக சட்டத்தின் சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ள இந்த சிங்கப்பெண் காவலர்கள், பொதுமக்களிடம் நேரடியாக சென்று விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
ரோந்து பணியில் இருந்த காவலரை நேரில் சந்தித்த பெண் ஒருவர், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு வளையத்தை கண்டு நெகிழ்ந்து, லேடி போலீசாரின் கையை பிடித்துத் தனது நன்றியை தெரிவித்தார். தவெக அரசின் இந்த அதிரடி ஆக்ஷன், தவறு செய்வோர் மத்தியில் மரண பயத்தையும், பெண்கள் மத்தியில் பெரும் தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva
