1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 3 டிசம்பர் 2016 (18:12 IST)

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமாவுக்கு சென்ற பரிதாபம்

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவருக்கு இரத்ததை மாற்றி கொடுத்ததால் அவர் கோமா நிலைக்கு சென்றதாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.


 

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கமலா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிரசவம் முடிந்த நிலையில் கமலாவிற்கு இரத்தம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து இரத்தம் ஏற்றிய சிறிது நேரத்தில் கமலா கோமா நிலைக்கு சென்றுள்ளர்.

இதையடுத்து, கமலாவிற்கு ’பி நெகட்டிவ்’ இரத்தப் பிரிவுக்கு பதிலாக ’பி பாசிட்டிவ்’ பிரிவு இரத்தம் ஏற்பட்டதால்தான் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் முதல் குழந்தை பிறந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த புகாரை மறுத்துள்ள திருவாரூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மீனாட்சி சுந்தரம், கமலாவிற்கு முன்னதாக இதய நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது என கூறியுள்ளார்.