பிரசவ கட்டணத்துக்கு பிறந்த குழந்தையையே விற்ற பெண்!


Caston| Last Modified சனி, 13 ஆகஸ்ட் 2016 (09:19 IST)
சென்னையில் சத்தியா என்ற பெண் 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் தன்னுடைய பிரசவ கட்டணத்துக்கு பிறந்த குழந்தையையே விற்ற சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த குழந்தையை மீட்டுள்ளனர்.

 
 
கணவருடன் பிரிந்து வாழ்ந்து வந்த சத்தியாவுக்கு பிரசவ கட்டணமாக 35 ஆயிரம் ரூபாய் பில் போட்டது தனியார் மருத்துவமனை. அதனை கட்ட முடியாத சத்தியா அதே மருத்துவமனையில் இருந்த லதா என்பவரிடம் தனக்கு பிறந்த குழந்தையை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.
 
இந்நிலையில் தற்போது நித்தியாவும், அவரது கணவரும் சேர்ந்து வாழ தொடங்கியதால், குழந்தையை விற்றது கணவருக்கு தெரிய வர அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இதனையடுத்து அந்த குழந்தையை தற்போது 4 ஆண்டுகளுக்கு பின்னர் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை சட்டவிரோதமாக தத்து எடுத்ததால் குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 


இதில் மேலும் படிக்கவும் :