7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த மாஸ்டர் பிளான் மாரியம்மா : பகீர் தகவல்கள்


Murugan| Last Modified புதன், 15 ஜூன் 2016 (14:45 IST)
திருப்பூர் மாவட்டத்தில் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை பற்றிய விபரங்கள் தற்போது வெளியே கசிந்திருக்கிறது.

 

 
தாராபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் சமீபத்தில் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்தார். அதில், அம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தன்னுடைய மனைவி பவித்ரா வீடு திரும்பவில்லை என்றும், அவருக்கு தான் போட்ட 15 பவுன் தங்க நகைகளுடன் அவர் மாயமாகி விட்டர். எனவே எனது மனைவியை கண்டுபிடித்து தாருங்கள் என்று புகார் கொடுத்தார்.
 
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் பவித்ராவை தேடி வந்தனர். போலீசாரின் தேடலில், உடுமலைப்பேட்டையில் பவித்ராவை மடக்கிப் பிடித்தனர். அப்போது அவருடன் ஒரு நபர் நின்றிருந்தார். அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
 
பவித்ராவின் நிஜப்பெயர் மாரியம்மா என்பதும், அவருடன் நின்றிருந்த நபர் அவருடைய முதல் கணவர் என்பதும், புகார் கொடுத்த செல்வகுமார் அவருக்கு 7வது கணவர் என்பதும் தெரிய வந்தது. இதைக் கேட்டு போலீசாருக்கு தலை சுற்றியது. அதன்பின் விசாரணையில், மாரியம்மாள் இதுவரை 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த விவகாரம் தெரிய வந்துள்ளது.


 

 

 
வயதாகியும், திருமணம் ஆகாமல் இருக்கும் வாலிபர்களை, சில தரகர்கள் மூலம் அணுகி, அவர்களிடம் 15 பவுன் நகை, ரூ.3 லட்சம் பணம் தரவேண்டும் என்று பேரம் பேசி மொத்தம் 7 பேரை திருமணம் செய்துள்ளார் மாரியம்மா. இவருக்கு உதவும் தரகர்களுக்கு கமிஷனும் கொடுத்துள்ளார்.
 
ஒவ்வொருவரிமும் சில நாட்கள் வாழ்ந்து விட்டு பின்னர் டேக்கா கொடுத்து விடுவதை பழக்கமாக கொண்டிருந்தார் மாரியம்மா. இதில் முதல் புருஷன் கருணாகரன் மட்டுமே இவருடன் கடைசி வரை இருந்துள்ளார். அவரும் மாரியம்மாளுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
 
“மாரியம்மா கடைசியா ஒருவருடன் நிச்சயம் செய்துள்ளார். அந்த நபர் ஒரு பட்டுப்புடவை மட்டும் வாங்கி கொடுத்துள்ளார். நல்ல வேளையாக அவர் அதோடு தப்பினார்” என்று சிரிக்கிறார்களாம் காவல் அதிகாரிகள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :