ஓடும் பேருந்தில் பிக்பாக்கெட் அடிக்கும் வசீகர இளம்பெண் கைது


Ashok| Last Updated: திங்கள், 7 டிசம்பர் 2015 (10:08 IST)
கோவையில் ஓடும் பேருந்தில் பயணம் செய்து ஒரு பெண்ணிடம் நகையை திருடி சென்ற இளம்பெண்ணை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

 

 
கோவை பிரஸ்காலனி சேர்ந்த பாண்டி மீனா என்பவர் நேற்று மாலை துடியலூரில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் அருகே ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தார். அந்த பெண் பாண்டிமணி கையில் வைத்திருந்த கைப்பையை திருடியுள்ளார்.

அந்த பையில் 4 பவுன் நகை இருந்துள்ளது. பின்னர் பேருந்தில் இருந்து இறங்கி தப்ப முயன்றுள்ளார். அப்போது தன்னுடைய கைப்பையை காணவில்லை என்று பாண்டிமணி சத்தம் போடவே பஸ்சில் பயணம் செய்த தனிப்படை காவல்துறையினர் நகைபறித்த இளம் பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர் அந்த இளம்பெண்னை  உக்கடம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் இவர் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஜானு என்பது தெரியவந்தது. கடந்த 2008ஆம் ஆண்டிலேயே கோவை சாய்பாபாகாலனி போலீசாரால் ஜானு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கோவையில் பல வழக்குகள் இருந்ததால் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைதுள்ளனர். பின்னர் வெளியே வந்த இவர் கோவையில் பல பகுதிகளில் தொடர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளா்.

மேலும், ஈரோட்டில் மாதம் 14 ரூபாயக்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும் ஜானு வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளரிடம் தன்னை டிவி நடிகை என்று தெரிவித்துள்ளார். ஈரோட்டிலிருந்து அடிக்கடி கோவைக்கு வந்து பஸ்சில் சென்று பெண்களிடம் நகை மற்றும் பணத்தை திருடுவது தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :