முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து – பெண் பலி!

accident
Last Updated: சனி, 24 அக்டோபர் 2020 (13:04 IST)

சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சென்னை சென்று கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம் சௌந்தரம் என்ற பெண் மீது மோதியது. இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 64 ஆகும்.இதில் மேலும் படிக்கவும் :