செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 மே 2025 (12:38 IST)

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!

திமுக எதிர்க்கட்சியாக கூட வராது: பிரபல அரசியல் விமர்சகர் கணிப்பு..!
வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், திமுக எதிர்க்கட்சியாக கூட வராது என்று பிரபல அரசியல் விமர்சகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
2026ஆம் ஆண்டு தேர்தல், வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், தமிழகத்தில் முதல் முறையாக தொங்கு சட்டசபை அமையும் தேர்தலாக இருக்கும் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.
 
அந்த வகையில், பொன் வில்சன் என்பவர் கூறியபோது, "திமுக வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட வராது" என்று கணித்துள்ளார். திமுக ஆட்சியில் ஏகப்பட்ட அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த கட்சிக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய எதிர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
அதிமுகவிலும் பல சிக்கல்கள் உள்ளன. ஓ. பன்னீர்செல்வம் பிரிந்து சென்றார். டெல்லியில் இருந்து அழுத்தம் வந்தது. இரட்டை தலைமையை ஒற்றை தலைமையாக ஈபிஎஸ் ஆக்கினார். இருந்தும், அந்த கட்சி எப்போதும் ஸ்டெடியாக உள்ளது என்றும், 2026இல் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
திமுக எதிர்க்கட்சியாக கூட வர வாய்ப்பில்லை என்றும், விஜய் கட்சி தான் எதிர்க்கட்சியாக வர வாய்ப்பு இருக்கிறது என்றும், அந்த அளவுக்கு திமுக மீது மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், அவர் கூறியது எல்லாம் அப்படியே நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran