1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜனவரி 2026 (15:16 IST)

திமுக கூட்டணிக்கு வருகிறதா தேமுதிக? எத்தனை சீட்? ராஜ்யசபா சீட் உண்டா?

திமுக கூட்டணிக்கு வருகிறதா தேமுதிக? எத்தனை சீட்? ராஜ்யசபா சீட் உண்டா?
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்த்த தேமுதிக, தற்போது ஆளும் திமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக அரசியல் வட்டாரங்களில் பலமான பேச்சு எழுந்துள்ளது. 
 
குறிப்பாக, அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 'ராஜ்யசபா சீட்'  வழங்கப்படாததால் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ள துடிக்கும் திமுக, திரைமறைவில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய வேண்டியிருப்பதால், தேமுதிகவிற்கு 8 முதல் 12 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க திமுக விரும்புவதாக தெரிகிறது.
 
இந்தக் கூட்டணி குறித்த இறுதி முடிவை வரும் ஜனவரி 9, 2026 அன்று கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிகவின் பிரம்மாண்ட மாநில மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva