1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. wife killed husband and kept the body in perambur station

ஆணுறுப்பை வெட்டினேன்!.. பெரம்பூர் சூட்கேஸ் கொலையில் பெண் வாக்குமூலம்!..

perambur
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் உள்ள நான்காவது பிளாட்பார்மில் கடந்த 5ம் தேதி காலை 7 மணி அளவில் ஒரு சூட்கேஸ் கிடந்தது. நீண்ட நேரமாக அந்த சூட்கேஸ் அதே இடத்தில் இருந்ததாலும் துர்நாற்றம் வீசியதாலும் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
போலீசார் வந்து அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் ரத்த காயங்களுடன் அதில் இருந்தது.  தலை இல்லாமல், அந்தரங்க உறுப்பு மற்றும் கை, கால்கள் வெட்டப்பட்டிருந்தது. அதன்பின் அந்த சடலம் கீழ்ப்பாக்கம் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணையில் இறங்கினார்கள்..
 
இநிலையில் இறந்து போனவரின் பெயர் அமீர் அலி என்பதும், அவரின் மனைவியே அவரை கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.  இதையடுத்து, அவரின் மனைவி கைது செய்யப்பட்டிருக்கிறார். 
வேறொரு ஆணுடன் சேர்ந்து கணவர் அமீர் அலியை கொலை செய்து தலை, கை, கால்களை வெட்டி உடலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் வைத்து விட்டதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
 
மேலும் ‘எனது கணவர் அமீர் அலி எனக்கு இரண்டாவது கணவர். அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தார். என்னுடைய முதல் திருமண வாழ்க்கையை பற்றி அடிக்கடி பேசி என்னை துன்புறுத்தி வந்தார். எனவே அஸ்ராம் அலி என்பவரோடு சேர்ந்து என் கணவர் அமீர் அலியை கொலை செய்தேன், ஆணுறுப்பை வெட்டினேன்.. என்னை ஏமாற்றிவிட்டு வேறு சில பெண்களோடு அவர் பழகியது எனக்கு பிடிக்கவில்லை’ என அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
விஜயை பார்க்க கேரளாவிலிருந்து நடந்தே வந்த தம்பதி!.. சந்திப்பாரா முதல்வர்?..