கள்ளக்காதலுக்காக தனது பார்வை குறைந்த கணவனை கொன்ற மனைவி


bala| Last Modified வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (12:18 IST)
கள்ளக்காதலுக்காக தனது பார்வை குறைந்த கணவனை கொன்ற மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

 

கோவை இருகூர் ஜெயஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 37) இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உண்டு. கணவர் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு வருமாம். மேலும் கணவனுக்கு பார்வை குறைவாகவே தெரிந்ததால் அவரை சாரதா மதிப்பதே கிடையாதாம்.

இந்த நிலையில் சாரதா, ராம்குமார் என்பவருடன் சேர்ந்து செல்லபிராணிகளை விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். இதில் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கவே அது கள்ளகாதலாக மாறியது. இதையடுத்து ராம்குமாருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட சாரதா அதற்கு தடையாக இருந்த தனது பார்வை குறைந்த கணவனை கொலை செய்ய முடிவு செய்தார். அவரது திட்டத்திற்கு ராமுவும் துணை நின்றார்.

அதன்படி ராம்குமார் அவரது நண்பர் கிருஷ்ணா என்பவருடன் சாரதா வீட்டிற்கு வந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த சக்திவேலை மூவரும் சேர்ந்து கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். பின்னர் உடலை துணியில் சுற்றி வீட்டுக்குப் பின்னால் இருந்த தொட்டியில வீசினர். மறுநாள் தனது கணவரைக் காணவில்லை என்று கூறி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சாரதா.

இதையடுத்து போலீஸார் விசாரனையில் மேற்கண்ட திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. இதையடுத்து சாரதாவை கைது செய்த போலீஸார் தலைமறைவாகிவிட்ட ராம்குமார் மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :