ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் எப்போது?

ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் எப்போது?


கே.என்.வடிவேல்| Last Modified திங்கள், 14 மார்ச் 2016 (22:57 IST)
பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் தொண்டர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்பமனு பெறப்பட்டது. மேலும், கூட்டணிக் கட்சி தலைவர்கள் சந்திப்பை நேற்று ஜெயலலிதா நடத்தினார்.
 
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலலிதா விரைவில் வெளியிடப்போவதாகவும்,  சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 2 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுக்க பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சுற்றுப் பயணம் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :