1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2016 (12:24 IST)

இது என்ன விசித்திரமான ஜந்து: ம.ந.கூட்டணியை விமர்சித்த எச்.ராஜா

மக்கள் நல கூட்டணியை விசித்திரமான ஜந்து என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.


 
 
செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா விஜயகாந்தின் தேமுதிக, மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்தது பாலைவனத்துக்கு தண்ணீர் பாய்ச்சியது போன்றதாகும் என்றார்.
 
மேலும் வைகோவின் ஈழம் தொடர்பான கொள்கையை மக்கள் நல கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் ஏற்றுக்கொள்கின்றனவா? இல்லை கம்யூனிஸ்டு கட்சிகளின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வைகோ ஏற்றுக்கொள்கிறாரா? என்ன ஒரு விசித்திரமான ஜந்து இது என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.