1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 ஜூன் 2025 (11:37 IST)

டில்லியில் இருந்து தமிழகத்தை ஆள, ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

Stalin
தமிழர்கள் சுயமரியாதை உள்ளவர்கள் என்றும், டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
சேலத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர், பின்னர் பேசியபோது, மதுரையில் சமீபத்தில் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கள் ஆட்சியை குறை சொல்லி இருக்கிறார். "அதனால்தான் அரசியல் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்," என்றார்.
 
"மத்திய அரசின் நிதியை மடை மாற்றுவதாகக் கூறியுள்ளார். பிரதமர் பெயரில் செயல்படுத்தப்படும் குடிநீர், வீடு கட்டுவது என எண்ணற்ற திட்டங்களாக இருந்தாலும், அதற்கு 50% நிதியை மாநில அரசு ஒதுக்கித்தான் அந்தத் திட்டம் செயல்படுகிறது.  'படையப்பா' படத்தில் மாப்பிள்ளை அவர்தான்  'அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்று ஒரு காட்சி வரும். அதுபோலத்தான் மத்திய அரசு பெயரளவில் திட்டங்களுக்கு நாங்கள்தான் நிதி வழங்கி கொண்டிருக்கிறோம்."
 
"மதுரையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் என்ன நிலையில் உள்ளது என்று பார்த்தீர்களா? அது மருத்துவமனையா அல்லது விண்வெளி ஆராய்ச்சி கூடமா? 11 ஆண்டுகளாக தமிழகத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? இதையெல்லாம் தட்டிக் கேட்க எதிர்க்கட்சி தலைவராக இருப்பவருக்கு துணிச்சல் இல்லை. மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாக அவர் செயல்பட்டு வருகிறார். கண்டிப்பாக வரும் தேர்தலில் அவரை மக்கள் புறக்கணிப்பார்கள்," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
Edited by Mahendran