1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 10 மார்ச் 2016 (09:34 IST)

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? : இந்த எண்னுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள  தேர்தல் கமிஷன் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது “ வாக்களர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள ஒருவர்,  தன்னுடையை வாக்களர் அட்டை எண்ணை டைப் செய்து 1950 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) அனுப்ப வேண்டும்.
 
அப்படி அனுப்பினால், அவரின் செல்போன் எண்ணிற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அதில் வாக்காளர் பெயர், முகவரி, அவர் ஓட்டுப்போட வேண்டிய வாக்குப்பதிவு மையம் போன்ற விவரங்கள் அனுப்பப்படும்.
 
அதேபோல், தேர்தல் தினமன்று, தான் ஓட்டுப் போடப் போகும், வாக்குப்பதிவு மையத்தில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள  ‘கியூ’ என்று டைப் செய்து தன்னுடைய வாக்காளர் அட்டை எண்ணையும் சேர்த்து 1950 எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், மொத்தம் எவ்வளவு பேர் அந்த வாக்குப்பதிவு மையத்த்தில் ஓட்டுப் போடுவதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்” என்று கூறியுள்ளார்.