வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2016 (18:06 IST)

தஞ்சாவூரில் விவசாயம் செய்யப்போகும் விஷால்! - கஷ்டத்தை உணரப்போவதாக விளக்கம்

நான் தஞ்சாவூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன். பத்திரிகைகளில் மட்டும் விவசாயத்தை பற்றி படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
 

 
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கத்தில் நெல் திருவிழா நேற்று சனிக்கிழமை தொடங்கியது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஷால் 'நெல் செய்தி' என்ற காலாண்டு இதழை வெளியிட்டார்.
 
பின்னர் பேசிய விஷால், “விவசாயியாக வாழ்வதே எனது வாழ்வின் நோக்கம். டெல்லா பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் செய்யவிருக்கிறேன். அப்போதுதான் விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். எனக்கு விதை விதைக்கும் பணி மிகவும் பிடிக்கும்.
 
எந்த ஒரு சூழலிலும் விவசாயிகள் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கக் கூடாது. பிரச்னைகளுக்குத் தற்கொலை தீர்வாகாது. வாழ்ந்து போராடி வெற்றிபெற வேண்டும்.   
 
எல்லா துறைகளிலும் பிரச்னைகள் இருக்கிறது. இதற்கு தற்கொலையை தேர்ந்தெடுத்தால் தமிழ் சினிமாவில் பாதிக்கு மேல்  உயிருடன் இருக்க மாட்டார்கள். கஷ்டங்களில் தவிக்கும் விவசாயிகளுக்கு நான் உதவி செய்யக் காத்திருக்கிறேன்.
 
நான் தஞ்சாவூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்யப் போகிறேன். பத்திரிகைகளில் மட்டும் விவசாயத்தை பற்றி படித்துக் கொண்டிருந்தால் விவசாயிகளின் கஷ்டங்களை உணர முடியாது. நேரடியாக நிலத்தில் இறங்கிப் பார்த்தால்தான் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
 
விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும். கடன் உள்ளிட்ட எந்த பிரச்னை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்ல கூடாது. அது நிரந்தர தீர்வும் அல்ல. தஞ்சாவூர் விவசாயி பாலன் பிரச்சனைக் குறித்து கேள்விபட்டதும் வேதனை அடைந்தேன். சில நண்பர்களின் ஒத்துழைப்புடன் உதவி செய்தேன். வருங்காலங்கிலும் தொடர்ந்து இந்த விழாவில் பங்கேற்பேன்” என்று கூறியுள்ளார்.