எடப்பாடி என்ன அவ்வளவு பெரிய ஆளா? விஜயகாந்த் மகன் ஆவேச பேச்சு!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 9 மார்ச் 2021 (14:51 IST)

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக கூட்டத்தில் பேசி வரும் விஜய பிரபாகரன்,
சாணக்கியனாக இருந்தது போதும் சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார். மேலும் சாதியை பற்றி எனக்கு தெரியாது. சாதியை பற்றி பேசினால் நான் முட்டாளாகவே இருப்பேன் என பேசிய அவர் அதிமுகவுக்கு இனி இறங்கு முகமாக இருக்கும்.

வரும் தேர்தலில் அதிமுகவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும் என்றார். அதோடு நிறுத்தாமல் என்ன சும்மா எடப்பாடி.. எடப்பாடி எடப்பாடி... எடப்பாடி என்ன அவ்வளவு பெரிய ஆளா? இந்தவாட்டி எடப்பாடியிலேயே மண்ண கவ்வுவீங்க என ஆவேசமாக பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :