வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 9 மார்ச் 2016 (12:28 IST)

விஜயகாந்த் தலைமையில் புதிய அணி? திருமாவளவனை சேர்க்க முயற்சி?: கண்ணாமூச்சி ரே..ரே..

விஜயகாந்த் தலைமையில் ஒரு அணியை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும், அந்த அணியில் ஒரு சில கட்சிகளை இணைக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

 
விஜயகாந் தலைமையில், இந்த கூட்டணி அமையவுள்ளதாகவும், இது குறித்து மக்கள் நலக்கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதனை மக்கள் நலக் கூட்டணி ஏற்காததால், மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனை அந்த கூட்டணியில் இருந்து இழுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
 
அந்த புதிய கூட்டணியில், தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக மற்றும் சில சிறிய கட்சிகளை ஒருங்கிணைக்க முயற் சியும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், திருமாவளவன் பஜகவுடன் கூட்டணி சேர தயக்கம் காட்டி வருவதாகவும், பாஜகவுடன் சேரமாமல் மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்தை திருமாவளவன் கோரின்கை விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.


 

 
எனவே, விஜயகாந்த் கூட்டணி குறித்த தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டால்தான்  இத்தகு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.
 
திமுக-தேமுதிக வுடனான் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் தொடர்ந்து வெளிகி வருவது குறிப்பிடத்தக்கது.