சர்வாதிகாரி விஜயகாந்த்: திருவள்ளூரில் ஆர்பாட்டம்


Caston| Last Modified புதன், 6 ஏப்ரல் 2016 (11:51 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து திருவள்ளூரில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 
 
நேற்று தேமுதிக முக்கிய நிர்வாகிகள் பலர் விஜயகாந்திற்கு எதிராக பேட்டியளித்து, அவர் திமுக கூட்டணியில் சேர விஜயகாந்திற்கு கெடு விதித்தனர். உடனடியாக அவர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் விஜயகாந்த்.
 
இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ சி.எச்.சேகரின் ஆதரவாளர்கள் விஜயகாந்திற்கு எதிராக திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
திருவள்ளூர் மாவட்ட செயலாளராக இருந்த சேகரிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய தேமுதிக அதிருப்தியாளர்கள், விஜயகாந்த் சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :