வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 16 டிசம்பர் 2015 (14:09 IST)

முதல்வர் வேட்பாளராகிறார் விஜயகாந்த்? : மக்கள் நலக் கூட்டணியில் மாற்றம்

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைய வாய்ப்பிருப்பதாகவும், அந்த கட்சியின் சார்பாக அவர் முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

 
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிற நிலையில், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
தேர்தல் வரும் போதுதான் தெரியும் என்றாலும், இப்போதே பெரும்பாலான கட்சிகள் அதற்கான வேலையில் இறங்கிவிட்டன.  ஆளும் கட்சியான அதிமுக அமைதியாக இருப்பதை பார்த்தால் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது போல் தெரிகிறது. மேலும் விஜயகாந்தின் முடிவை பொறுத்தே ஜெயலலிதா தனது கூட்டணியை முடிவு செய்வார் என்று கூறப்பட்டு வருகிறது.
 
எப்போதும், திராவிட கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் பாமக, இனிமேல், திமுக மற்றும் அதிமுக-வோடு கூட்டணியில்லை என்று  ஏற்கனவே அறிவித்து விட்டது. மேலும் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் பாமாக-வில் இணையலாம் எனவும் கூறிவிட்டார்கள். எனவே அவர்கள் தனியாக போட்டியிடுவதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது.
 
முக்கிய எதிர்கட்சியான திமுக, பலமான கூட்டணி ஏற்படுத்தி எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. 
 
ஆனால் அதற்கு வேட்டு வைக்கும் வகையில், வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவானது. எப்போதும் திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனும் இப்போது மக்கள் நலக் கூட்டணிக்கு சென்று விட்டார். 
 
பாஜாகவை பொறுத்த வரை கடந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் நீடித்த கூட்டணியையே, சட்ட சபை தேர்தலிலும் விரும்புவார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் அதிமுகவும், பாஜாகவும் இணைவதற்கு வாய்ப்பிருப்பதாக சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகிறது.
 
காங்கிரசை பொறுத்தவரை, அந்த கட்சியோடு எந்த கட்சியும் கூட்டணி வைக்க விருப்பம் காட்டுவது போல் தெரியவில்லை. ஒருவேளை திமுக வோடு இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது. 
 
கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிக-வும் மனம் மாறும் என்று கலைஞர் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் விஜயகாந்தோ, அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே உழல் கட்சி என்று பகீரங்கமாக கூறிவருகிறார். ஆனால், நான் ஏன் இறங்கி போக வேண்டும், வேண்டுமானால் நீங்கள் என்னிடம் வாருங்கள் என்று பொடி வைத்தும் பேசி வந்தார். இதனால் விஜயாகாந்த் என்ன முடிவெடுப்பார் என்பது குழப்பமாகவே இருந்தது.
 
இந்நிலையில் சமீபத்தீல், மக்கள் நலக் கூட்டணி பற்றி ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த விஜயகாந்த் “அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் மக்கள் நலக் கூட்டணி மீது உழல் குற்றச்சாட்டு இல்லை. மேலும் அந்த கூட்டணியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன” என்று கூறியிருந்தார்.
 
இதில் உற்சாகம் அடைந்த மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும், இதை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். மேலும் விஜயகாந்த மக்கள் நலக் கூட்டணிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அவரை எப்படியாவது அந்த கூட்டணிக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
 
விஜயாகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால், அவரை முதலமைச்சர் வேட்பாளாராக அறிவிக்கவும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வைகோவும், திருமாவளவனும் அதை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாக தெரிகிறது. மேலும் ஜிகே வாசனின் தா.மா.கா வையும் அந்த கூட்டணிக்கு இழுக்க முயற்சி நடக்கிறது.
 
விஜயாகாந்த் கடந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜாக உடனான கூட்டணியில் இருந்தார். வரும் சட்டசபை தேர்தலிலும் அவரை தக்க வைக்க பாஜக முயற்சி செய்யும். திமுகவும் எப்படியாவது தங்கள் கூட்டணியில் அவரை கொண்டு வர வேண்டும் என்று காய் நகர்த்தி கொண்டிருக்கிறது. இப்போது மக்கள் நலக் கூட்டணியும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
 
கேப்டன் என்ன முடிவெடுப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்...