தேமுதிக-வின் அடிமட்டத்தை அரிக்கும் விஜயகாந்தின் கூட்டணி குழப்பம்

தேமுதிக-வின் அடிமட்டத்தை அரிக்கும் விஜயகாந்தின் கூட்டணி குழப்பம்


Caston| Last Updated: புதன், 9 மார்ச் 2016 (13:23 IST)
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத கூட்டணி குழப்பம் நீடித்து வருகிறது. விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்காக தமிழக பிரதான கட்சிகள் பலவும் காத்துக் கொண்டிருக்கின்றன.

 
 
நாளுக்கு நாள் கூட்டணி பேச்சுவார்த்தையை இழுத்தடித்து வரும் விஜயகாந்த் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள், தொண்டர்கள் மத்தியில் எந்த மாதிரியான அதிருப்திகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பற்றி விஜயகாந்த் உண்மையிலேயே யோசித்திருக்க மாட்டார்.
 
விஜயகாந்திடம் இருந்து, மக்களும், தொண்டர்களும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என விஜயகாந்திற்கு தெரியும், இருந்தும் ஏன் இந்த கூட்டணி இழுபறி. தன் சுய லாபத்திற்காகவே விஜயகாந்த் இப்படி இழுத்தடிக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இது தான் மக்கள் மத்தியில் தற்போது விஜயகாந்த் பற்றிய எதிர்மறையான கருத்து வருவதற்கு காரணம்.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவிட்டது, ஆனால் கூட்டணி குறித்து இன்னமும் முடிவெடுக்காமல் தேர்தல் பணிகளில் தொண்டர்களை முடுக்கிவிடும் நேரம் இது, ஆனால் கூட்டணி குறித்து முடிவாகாததால் தொண்டர்களும் சோர்வாக உள்ளனர்.
 
திமுக உடன் கூட்டணி, பாஜக உடன் கூட்டணி, மக்கள் நல கூட்டணி உடன் கூட்டணி என குழப்பத்தில் இருப்பதை பார்த்து தேமுதிக தொண்டர்களே குழப்பத்தில் உள்ளனர். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளோம் என தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற தொண்டர்களின் மனநிலைக்கு மாறாக வேறு ஏதாவது கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக சிதறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
 
கட்சியினர் விரும்பும் கூட்டணியை விஜயகாந்த் அமைக்காவிட்டால் தங்கள் பதவிகளைத் துறந்து வேறு கட்சிகளில் சேர பல தேமுதிகவினர் தயாராக உள்ளனர் எனவும், இவர்களை தங்கள் பக்கம் இழுக்க அதிமுகவும் தயாராகவே உள்ளதாக கூறப்படுகிறது.
 
கூட்டணி இழுத்தடிப்பால் தன் சுய விருப்பங்களை நிறைவேற்ற பார்க்கும் விஜயகாந்தின் நடவடிக்கையால் தேமுதிகவின் அடிமட்டம் அரிக்கப்படுகிறது. மக்கள் மத்தியிலும் விஜயகாந்தின் மவுசு குறைந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை ஏன் இவ்வளவு காலம் நீடித்து வருகிறது.
 
பேச்சுவார்த்தைகளில் விஜயகாந்தின் கோரிக்கைகள் என்ன, அவர் அடைய விரும்பும் பலன்கள் என்ன என ஊடகங்களில் வெளிவரும் தகவல்களால் மக்கள் மத்தியில் விஜயகாந்தின் மவுசு குறைந்துள்ளதாகவே தகவல்கள் வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :