1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijay to start campaigning in Trichy! Thalapathy 2026 political campaign tour update!

திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! தளபதி 2026 அரசியல் பிரச்சார பயணம் அப்டேட்!

Thalapathy 2026 political campaign

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி தமிழக சட்டமன்ற தேர்தலை குறிவைத்து விஜய் செயல்பட்டு வரும் நிலையில் அவரது முதல் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியிலும், இரண்டாவது மாநாட்டை மதுரையில் விஜய் நடத்திய நிலையில் லட்சக்கணக்கானோர் மாநாட்டில் கலந்துக் கொண்டனர். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே பேச விஜய் திட்டமிட்டுள்ளார்.

 

அதன்படி விஜய்யின் சூறாவளி சுற்றுப்பயணம் செப்டம்பர் 13ம் தேதி தொடங்க உள்ளது. முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 13ம் தேதி திருச்சி சத்திரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் அங்கிருந்து அரியலூர், குன்னம், பெரம்பலூர் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ‘தளபதி 2026 அரசியல் பிரச்சார பயணம்’ என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த பிரச்சாரத்திற்கான அறிவிப்பை தொடர்ந்து தவெக தொண்டர்கள் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

அடுத்த கட்டுரையில்
ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் அனுமதியை ரத்து செய்யாதது ஏன்? - அன்புமணி கேள்வி!