விஜய் சென்ற தனி விமானம்.. ஒருநாள் வாடகை இத்தனை லட்சமா? மேலும் விமான நிலையத்தில் நிறுத்தும் கட்டணம்..!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றபோது பயன்படுத்திய தனி விமானத்தின் வாடகை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சென்னையில் இருந்து டெல்லி செல்லவும், அங்கிருந்து திரும்பவும் சுமார் 10 முதல் 12 இருக்கைகள் கொண்ட அதிநவீன 'பிசினஸ் ஜெட்' ரக விமானத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இத்தகைய சொகுசு விமானங்களுக்கு ஒரு மணி நேரத்திற்குச் சுமார் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், ஒரு நாள் முழுமைக்கும் இந்த விமானத்தை வாடகைக்கு எடுத்தால், அதன் செலவு சுமார் ரூ. 20 லட்சத்தை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது.
விமான வாடகை மட்டுமின்றி, விமான நிலையத்தில் அந்த விமானத்தை நிறுத்தி வைப்பதற்கான கட்டணமும் கணிசமாக இருக்கும். டெல்லி போன்ற சர்வதேச விமான நிலையங்களில் தனியார் விமானங்களை நிறுத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு பல ஆயிரங்கள் முதல் ஒரு நாளுக்கு ரூ. 50,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், தரையிறங்கும் கட்டணம் , விமானப் பணியாளர்களுக்கான செலவுகள் என பட்டியல் நீள்கிறது. அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், விஜய்யின் இந்த 'ராயல்' பயணம் மற்றும் அதற்கான செலவுகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளன.
Edited by Siva