கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களை சந்திக்காமல் இருந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நாளை புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். காவல்துறையின் அனுமதியுடன் புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
விஜய்யின் அரசியல் நகர்வில் இந்த புதுச்சேரி பொதுக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து காரில் புறப்படும் விஜய், காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்தை அடைகிறார்.
இந்த கூட்டத்திற்காக விஜய்யின் பிரச்சார வாகனம் இன்று மாலையே புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டது. அந்த வாகனத்தில் நின்றவாறே விஜய் தொண்டர்களிடையே உரையாற்றுகிறார்.
மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்படவில்லை; அவர்கள் அனைவரும் நின்றவாறே விஜய்யின் உரையை கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Edited by Mahendran