இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா விஜய்?!.. கசிந்த தகவல்!...
தமிழக அரசியல் களம் இதுவரை அதிமுக, திமுக என்கிற இரண்டு கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவே பார்க்கப்பட்டது. தற்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் கவனிக்கப்படும் ஒரு அரசியல் கட்சியாக மாறியிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம் விஜய் ஒரு நட்சத்திர நடிகர். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு சினிமா நடிகராக அவர் தமிழகத்தில் உள்ள எல்லோருக்கும் அறிமுகமானவர். அவருக்கு நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.. வயதான பலரும் கூட விஜயை ஆதரிக்கிறார்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது திமுகவை தோற்க வேண்டும் என்ற விஜய் நினைக்கிறார். ஆனால், இதுவரை எந்த கட்சியுடனும் அவர் கூட்டணி அமைக்கவில்லை. தேர்தலில் தனக்கு 20 சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார். இந்நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் எனத் தவெகவினர் சொல்கிறார்கள்.
அதில் ஒன்று திருச்சி கிழக்கு, மற்றொன்று சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது வேளச்சேரி என ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவார் என்கிறார்கள்..