வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (11:42 IST)

போலீஸ் வாகனத்தை தெறிக்க விட்ட விஜய் கட் அவுட்

நடிகர் விஜயின் கட் அவுட் கீழே விழுந்து, போலீஸ் வாகனம் சேதமடைந்த விவகாரம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நடிகர் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து உருவான ‘தெறி’ திரைப்படம் நேற்று ரிலீசானது. திருநெல்வேலியில் மூன்று திரையரங்குகளில் அந்த படம் நேற்று திரையிடப்பட்டது.
 
 
இந்நிலையில், திருநெல்வேலி ரயில்வே நிலையம் அருகே உள்ள திரையரங்கில் அந்த படம் திரையிடப்பட்டது. இதனால், விஜய் ரசிகர்கள் காலை முதலே தியேட்டரில் குவிந்தனர். விஜயை வாழ்த்தி பேனர் மற்றும் டிஜிட்டல் போர்டுகள் ஆகியவற்றை வைத்திருந்தனர். 
 
முக்கியமாக, தியேட்டர் வளாகத்தில் 140 அடி உயர பிரமாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
அப்போது, திடீரென அந்த கட் அவுட் சரிந்து விழுந்தது. அதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசார் வாகனம் பலத்த சேதமடைந்தது. 


 
 
காற்று பலமாக வீசியதால்தான் கட் அவுட் சரிந்து விழுந்ததாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக, அந்த வாகனத்தில், காவலர்கள் யாரும் இல்லாததால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை.