அரக்கோணம் இரட்டைப் படுகொலையை நியாயப்படுத்தக் கூடாது… வேல்முருகன் பதில்!

Last Updated: திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:19 IST)

அரக்கோணத்தில் சில தினங்களுக்கு முன் இருவர் படுகொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் கட்சி தொடர்பான வாக்குவாதம் ஒன்றின் பேரில் அரக்கோணத்தை சேர்ந்த அர்ஜுன் மற்றும் சூர்யா என்ற இளைஞர்களை குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அடித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த காவல்துறை இதுவரை 5 பேரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் இந்த கொலைகள் குறித்து பேசியுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ‘அரக்கோணம் படுகொலைகளை நியாயப்படுத்தக் கூடாது. கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :