வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (11:53 IST)

தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்தது: 10 தொழிலாளர்கள் பலி

வேலூர் அருகே உள்ள ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 10 தொழிலாளர்கள், தொழிற்சாலை கழிவில் சிக்கிப் பலியாயினர்.
 
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. சிப்காட் தீயணைப்பு நிலையம் பின்புறம் தோல் தொழிற் சாலைகள் பொது சுத்திகரிப்பு மையம் உள்ளது.
 
இங்கு 1000 கன லிட்டர் கொள்ளளவு கொண்ட சுமார் 20 அடி உயரைம் கொண்ட பிரமாண்ட கழிவுநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி அருகில் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஓய்வுவெடுக்கும் கொட்டகை உள்ளது.
 
இந்நிலையில், அந்த கொட்டகையில் அங்கு வேலை பார்க்கும் 13 தொழி லாளர்கள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு திடீரென பொது சுத்திகரிப்பு தொட்டி இடிந்துவிழுந்தது.
 
அதிலிருந்த தோல் கழிவு சேறு போல் பெருக்கெடுத்து தொழிலாளர்கள் தூங்கி கொண்டிருந்த கொட்டகைக் குள் புகுந்தது. அதிலிருந்து விஷவாயு வேகமாக பரவியது. இதனால் தூங்கி கொண்டிருந்த 10 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர்.
 
கண்காணிப்பாளர் அமீர், ரவி, பழனி ஆகியோர் அங்கிருந்து தப்பினர். கொட்டகைக்குள் புகுந்த கழிவுநீர் தூங்ககிக்கொண்டிருந்த 10 தொழிலாளர்களையும் மூழ்கடித்தது. இதனால் அவர்கள் தோல் கழிவுக்குள்ளேயே சிக்கி பிணமானார்கள். 
 
இவர்களில் 9 பேர் மேற்கு வங்க மாநிலம் சால்தாபதானி கிராமத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தொழிற்சாலை முழுவதும் 2 அடி உயரத்திற்கு கழிவுநீர் தேங்கியது.
 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு கவசம் அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.