வேளச்சேரி தேர்தல் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு !

Sugapriya Prakash| Last Modified சனி, 17 ஏப்ரல் 2021 (09:42 IST)
சென்னை வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்கு பதிவு மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

 
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் பாகம் எண் 92ல் விவி பாட் உள்ளிட்ட வாக்குச்சாவடி பெட்டிகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற விவகாரத்தால் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து வேளச்சேரியில் 92ல் ஆண் வாக்காளர்க்கு மட்டும் மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
முன்னதாக நேற்று மாலை தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்புலட்சுமி தலைமையில் பாதுகாக்கப்பட்ட வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்களிக்கும் மையத்திற்கு வாக்குச்சாவடி பெட்டிகளை எடுத்து வந்தனர். இன்று காலை 7 மணி முதல் துவங்கிய வாக்கு பதிவு மாலை 7 வரை நடைபெறவுள்ளது. 
 
மறுவாக்கு பதிவு நடைபெறும் மையத்திற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 548 வாக்குகள் கொண்ட இந்த வாக்குச்சாவடியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வாக்களிக்க வருபவர்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் வாக்களிக்க செல்லும் முன்பு அவர்களுக்கு சானிடைசர் வழங்கப்படுகிறது. வாக்களிக்கும் மைத்திற்கு வந்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் போதிய பாதுகாப்புடன் மறுவாக்கு பதிவு நடைபெறுகிறதா என ஆய்வு செய்தார்.


இதில் மேலும் படிக்கவும் :