ஊரடங்கின்போது வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்: காவல்துறை ஆணையர் அறிவிப்பு

ஊரடங்கின்போது வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்
siva| Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (21:44 IST)
 
ஊரடங்கின்போது வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ஊரடங்கு நேரத்தில் வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வாகனங்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் வருபவர்களை கண்காணிக்க 200 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பிதழை வைத்திருக்க வேண்டும் என்றும் ரயில் மற்றும் விமான நிலையங்கள் செல்வோருக்கு பயண டிக்கெட்டை காண்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 


இதில் மேலும் படிக்கவும் :