வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் யானைகள் புத்துணர்வு முகாம்


K.N.Vadivel| Last Updated: வியாழன், 7 ஜனவரி 2016 (23:06 IST)
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
 
 
சென்னை - வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, புலி, கரடி, யானை, சிங்கம், மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், பறவைகளும் உள்ளன. இவைகளை காண தினமும் பல ஆயிரம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.
 
இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று காலை தொடங்கப்பட்டது. இதனை பார்வையாளர்கள் கண்டு மகிழ பூங்கா நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :