கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களாக தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அவருக்கு, காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக பிரசாரத்தை தொடர முடியாத சூழல் உருவானது. இதனை தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வானதி சீனிவாசன் குணமடையும்...