1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified திங்கள், 10 அக்டோபர் 2022 (10:13 IST)

2023 ரத்தக் கசிவோடு பிறக்கனுமா? வைரமுத்து பதிவு!

ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையிம் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து நடந்து வரும் போரால் இரு தரப்பு ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருவதுடன், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டின் லுஹான்ஸ்க், டோனர்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா உள்ளிட்ட பிராந்தியங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா அவற்றை தனது நாட்டுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரஷ்யா - உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். 

கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் 2023 ரத்தக் கசிவோடு பிறக்கும் போரை நிறுத்துங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Edited By: Sugapriya Prakash