1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 10 டிசம்பர் 2014 (13:22 IST)

தமிழர்களை வெளியேற்ற கர்நாடகா முயற்சி: வைகோ கண்டனம்

கர்நாடக வனத் துறையினர், ஒகேனக்கல் மறுகரையில் உள்ள தமிழ்க் குடும்பங்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளமதக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் மறுகரையில், கர்நாடக எல்லையில் மாறுகொட்டாய், தேங்காகொம்பு, புங்கொம்பு, ஆத்தூர், கோட்டையூர், ஆலம்பாடி, அப்புகாம்பட்டி, ஜம்புருட்டுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.
 
இந்தக் கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் பிடித்தல், பரிசல் இயக்குதல் ஆகியவைதான் அவர்களின் பிரதான தொழில்.
 
இந்நிலையில், அந்தப் பகுதியில் சரணாலயம் அமைக்கப்பட இருப்பதாகக் கூறி, சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நெருக்கடி வலுத்து வருகிறது.
 
மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பிருந்தே மூன்று தலைமுறையைக் கடந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஒகேனக்கல் எங்களுக்குச் சொந்தம். தமிழக எல்லையை வரையறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
எனவே, இந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தமிழர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தர வேண்டும். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.