செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (14:41 IST)

பழம் கனிந்து விஷப்பாலில் விழக்கூடாது : கருணாநிதி கருத்துக்கு வைகோ பதிலடி

திமுக தலைவர் கருணாநிதியிடம் விஜய்காந்த் ஏமாந்துவிடக்கூடாது என்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் தொடர்ந்து 12 நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணல் இன்றுடன் நிறைவடைந்தது. அதன்பின், கலைஞர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்
 
அப்போது செய்தியாளர்கள், திமுக - தேமுதிக கூட்டணி முடிவாகிவிட்டதா? என்று கேட்டதற்கு, ”பழம் கனிந்து கொண்டிருக்கிறது. பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்தார்.
 
திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்று நம்புகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, ’நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது’ என்று கருணாநிதி கூறினார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த வைகோ “ பழம் நழுவி தூய்மையான பாலில் விழ வேண்டும். ஊழல் மற்றும் விஷம் கலந்த பாலில் விழக்கூடாது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே விஜயகாந்த் ஏமாந்துவிடக் கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.