முதல்வர் வேட்பாளராக வைகோ-வை அறிவித்தால் வெற்றி நிச்சயம்: தமிழருவி மணியன்


K.N.Vadivel| Last Modified ஞாயிறு, 10 ஜனவரி 2016 (23:25 IST)
தமிழகத்தில், முதல்வர் வேட்பாளராக வைகோ-வை அறிவித்தால் மக்கள் நலக்கூட்டணிக்கு வெற்றி நிச்சயம் என தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியதாவது:-
 
சமூக வலைதளங்களிலும், இளைஞர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும்பான்மையினர் மத்தியில் அபரிமிதமான செல்வாக்கு ஐயா வைகோ அவர்கள் மீது உள்ளது. ஆட்சியைப் பிடிக்க வேண்டுமாயின் கரைபடாத கரத்திற்கு சொந்தக்காரர், ஓய்வு அறியாத உழைப்பாளி வைகோ அவர்களை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். இல்லையேல் வெற்றி பெற்றதற்குப் பின்பு குழப்பம் ஏற்படும் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :