1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 11 டிசம்பர் 2014 (17:32 IST)

விற்பனையாகாத, மோசமான சரக்குகள் டாஸ்மாக்கில் விற்பனை - ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் பேட்டி

விற்பனையாகாத, மோசமான சரக்குகள் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக டாஸ்மாக் ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் திருச்செல்வன் பேட்டி அளித்துள்ளார்.
 
இது குறித்து ஊட்டியில், திருச்செல்வன் அளித்த பேட்டியில், ”டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யமல் அரசு கொத்தடிமையாக நடத்தி வருகிறது. தமிழகத்தில் பால், முட்டை, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதலில் முறைகேடு நடப்பது போல், டாஸ்மாக்கிலும் முறைகேடு நடக்கிறது.
 

 
விற்பனையாகாத மற்றும் மோசமான சரக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இது விற்காவிட்டால் அப்படியே மீண்டும் எடுத்துக் கொண்டு வேறு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். 
 
கமிஷன் அதிகம் தரும் கம்பெனிகளுக்கு ஆர்டர் தருகின்றனர். இதனால், உயர் ரக மது வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. பீர் ஆறு மாதங்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது” என்று அவர் கூறினார்.