செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 நவம்பர் 2025 (08:38 IST)

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!
சமீபத்தில் திமுக சார்பில் அறிவு திருவிழா நடத்தப்பட்ட நிலையில், இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
 
அதற்கு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், "அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துகிறான்" என விமர்சனங்களுக்கு மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.
 
திருவிழா தொடங்கிய நான்கு நாட்களுக்கு அப்புறம்தான் இப்படி ஒரு விழா நடக்கிறது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. 'எப்படி நீங்கள் திருவிழா நடத்தலாம்?' என்று கேட்கிறார்கள். 
 
அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துகிறான். இதில் விமர்சனம் செய்துவிட்டோம் என்று கோபம் வேறு. போலீசை பார்த்தால் திருடர்களுக்கு எப்படிப் பயம் வருமோ, அதுபோல் 'அறிவு' என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது," என்று அவர் பேசினார்.
 
மேலும், "சுகாதார மேம்பாட்டை பற்றிப் பேசும்போது கிருமியை பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? அதுபோல்தான், அறிவு திருவிழா கொள்கைகளை பற்றி பேசும்போது, கொள்கையற்ற கும்பலோட ஆபத்தை பற்றியும் பேசி வருகிறோம்," என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார். அவருடைய இந்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva