எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும் – உதயநிதி டுவீட்

sinoj| Last Updated: திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (23:14 IST)

இந்தியாவிலேயே கொரொனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தன் அதிகளவில் பலியாவதாக செய்திகள் வெளியாகின்றன.

இதுகுறித்து நடிகர் உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் இந்த மெத்தனம் தமிழகத்துக்கே தலைகுனிவாகும் என்று தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :