’ஊரடங்கில் ஒரு காதலை’ வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

Sinoj| Last Modified வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (18:54 IST)


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சிக்கு என கட்சிப் பாடலை உருவாக்கினர்.


இதில் வெற்றி நடைபோடும் தமிழகமே என்று அதிமுகவும், ஸ்டாலிந்தான் ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற பாடல்களை தொடர்ந்து தொலைக்காட்சி,எஃப்.எம்களில் ஒள்பரப்பினர்.

அதனால் அந்தந்தக் கட்சியைச் சேர்ந்த மக்கள் பெரும் மகிழ்ந்து அதை பரப்பினர்.

இந்நிலையி,
திமுகவுக்கு ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ர பாடலை கம்போசிங் செய்துகொடுத்த இசையமைப்பாளர் ஜெரார்ட் ஃபெலிக்ஸ் , ’ஊரடங்கில் ஒரு
காதல்’ இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இப்பாடல் குறித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி இப்பபாடல் குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சென்றடைந்த நம் ’ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரப் போறாரு’ பிரச்சார பாடலுக்கு இசையமைத்த தம்பி @jerard_felixஅவர்களின் ’ஊரடங்கில் ஒரு காதல்’ இசை ஆல்பத்தை இயக்குநர்@menongautham அவர்களுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.1/2காதல் - ஏக்கம் - வலி என அத்தனை உணர்வுகளையும் இசை வழியாக கடத்தும் இந்த ஆல்பம் வெல்ல வாழ்த்துகிறேன். அன்பும் நன்றியும். #OoradangilOruKaadhal #TamilPop #OneMinuteMusicSeries #JerardFelix எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :