திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: திங்கள், 5 ஜனவரி 2026 (11:22 IST)

திமுக எதிரி.. ஆனா கனிமொழி எனக்கு ஃபிரண்ட்!.. வாழ்த்து சொன்ன விஜய்...

திமுக எதிரி.. ஆனா கனிமொழி எனக்கு ஃபிரண்ட்!.. வாழ்த்து சொன்ன விஜய்...
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியது முதலே திமுகவை மட்டுமே டார்கெட் வைத்து கடுமையாக விமர்சித்து வருகிறார் அக்கட்சியின் தலைவர். அவர் வெளியிடும் அறிக்கைகளில் கூட கபட நாடக திமுக அரசு என்றுதான் தொடர்ந்து குறிப்பிடுகிறார். அதேபோல் ஈரோட்டில் பொதுக்கூட்டத்தில் பேசியவிஜய் திமுகவை தீய சக்தி என பேசியிருந்தார். மேலும், வரும் தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என அவர் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
 
இது திமுக தரப்பை கடும் கோபத்திற்கு ஆளாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் நோக்கமாக இருக்கிறது. அதேநேரம், அவர் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையாமல் தனித்தே தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விஜய் தனியாக தேர்தலை சந்தித்தால் திமுகவை தோற்கடிக்க முடியாது என அரசியல் விமர்சர்கள் சொல்லி வருகிறார்கள்.
 
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில்தான் இன்று 58வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக எம்.பி. கனிமொழிக்கு தொலைப்பேசி மூலம் தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். திமுகவை தனது அரசியல் எதிரி என சொல்லிவரும் விஜய் கனிமொழிக்கு வாழ்த்து சொன்னது அரசியல்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.