செவ்வாய், 21 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

சேலத்தில் இன்று நிர்வாகிகளை சந்திக்கும் விஜய்.. QR குறியீடுடன் கூடிய நுழைவுச்சீட்டு

vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த சந்திப்பில் பங்கேற்க, QR குறியீடுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தலா 250 பேர் வீதம் அமர 18 தனித்தனி பிளாக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
பாதுகாப்பு பணிகளுக்காக 25 சிசிடிவி கேமராக்கள் மூலம் மைதானம் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. மேலும், 2 தீயணைப்பு வாகனங்கள், 15 மருத்துவ குழுக்கள் மற்றும் 6 மருத்துவ முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. 
 
7 வெவ்வேறு இடங்களில் 11 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளின் வாகனங்களை நிறுத்த தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நுழைவுச் சீட்டு இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
விஜய்யின் இந்த சேலம் வருகை அவரது அரசியல் பயணத்தின் அடுத்த முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva